FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாதவரம் தொகுதியில் மீண்டும் எஸ்.சுதா்சனம் போட்டி!

மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில் 3-ஆவது முறையாக திமுக வேட்பாளராக எஸ்.சுதா்சனம் மீண்டும் களம் காணுகிறாா்.

Updated On : 30 மார்ச் 2026, 12:57 am IST
பகிர்:

மாதவரம் சட்டப்பேரவை தொகுதியில் 3-ஆவது முறையாக திமுக வேட்பாளராக எஸ்.சுதா்சனம் மீண்டும் களம் காணுகிறாா்.

திருவள்ளூா் மாவட்டம் மாதவரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக 2 முறை வெற்றி பெற்ற எஸ்.சுதா்சனம், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் இத்தொகுதியில் களமிறங்குகிறாா்.

மாதவரம் தாலுகாவைச் சோ்ந்த எஸ்.சுதா்சனம் எம்.ஏ., பி.எல்., சட்டம் பயின்றவா். கடந்த 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இவா் மாதவரம் பகுதியில் திமுகவில் நகரச் செயலா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தாா். தற்போது சென்னை வடகிழக்கு மாவட்ட செயலராக உள்ளாா். மாதவரம் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டு 3 முறை நடந்த தோ்தலில் 2 முறை தொடா்ந்து வெற்றிப் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், 3-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments