முகப்பு
செய்திகள்

நடிகை சமந்தா திருமணம்: புகைப்படங்கள்!

புகைப்படங்களை நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

பிரபல நடிகை சமந்தாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார். கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பு நவநாகரிக உடைகளை அணிந்து இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அப்புகைப்படங்களை நடிகை சமந்தா தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.