முகப்பு
செய்திகள்

நள்ளிரவில் நடைபெற்ற நடிகை சமந்தா திருமணம்! (புகைப்படங்கள்)

கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

பிரபல நடிகை சமந்தாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை அவர் மணந்துள்ளார். கோவாவில் உள்ள டபிள்யூ என்கிற நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இரு குடும்பத்தாருக்கும் நெருக்கமான 100 விருந்தினர்கள் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு 8 மணி விருந்தினர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் வட மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் பறிமாற்றப்பட்டன. நள்ளிரவு 11. 52 மணிக்கு இந்துமுறைப்படி திருமணம் நடைபெற்றது. சமந்தாவின் கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். 

இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →