முகப்பு
செய்திகள்

தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா?  கொந்தளிக்கும் இயக்குநர் !

தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா என்று 'ப்ரேமம்' திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சென்னை: தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா என்று 'ப்ரேமம்' திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

புதுதில்லியில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கிறது. இது குறித்து திரைப்படத்துறையினர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் 'ப்ரேமம்' திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள்

ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன? எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?  தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? தாயம் உருட்டவும், சீட்டுகளை குலுக்கவும் எடுத்துக்கொள்ளும் நேரமும், முயற்சியும், ஒரு திரைப்படம் எடுப்பதற்காக செலவிடப்படும் நேரமும் முயற்சியும் ஒன்றாகிவிடுமா?

தமிழ் சினிமா துறையில் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகளான நீங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →