செய்திகள்

ஒரு வில்லன் இல்லை பல வில்லன்கள்! ஸ்கெட்ச் பட அப்டேட்

DIN

விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் சமீபத்தில் இப்படம் குறித்து பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் இருக்கும். அங்கு வாழும் சில உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர். மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம். அதனால், படத்தில் ஒரே ஒரு வில்லன் கிடையாது, பல வில்லன்கள் இருக்கின்றனர், அது படம் பார்க்கும் போதுதான் உங்களுக்குத் தெரியும்’ என்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமின் 53-வது படமிது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுள்ளது. ராதாரவி, ஸ்ரீபிரியங்கா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT