செய்திகள்

மணி ரத்னத்தின் புதிய படத்தில் போலீஸாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி

DIN

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நட்சத்திரக் கூட்டங்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொருவருடைய படங்கள் அமைந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

மூன்று முன்னனி ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்களின் நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து படத்தில் வேலை செய்யப் போகிறார்களாம்.

விஜய் சேதுபதி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு இணையாக ஜோதிகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபகத் பாசில் உள்ளிட்ட மற்ற அனைவரும் கேங்க்ஸ்டர்களாக நடிக்கிறார்களாம். இப்படத்துக்காக விஜய் சேதுபதி உடல் எடையைக் குறைக்கவிருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

எப்போதும் ராணி நான்... ஸ்ரேயா!

றெக்க றெக்க பாடல்!

வரி விதிப்பால் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

வேடுவன் இணையத் தொடர்!

SCROLL FOR NEXT