செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் இதுதான்!

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கோகுல்

DIN

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள 'ஜுங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் நடைப்பெற்று வருகிறது. பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை எடுத்தபின் அடுத்த மாதம் படக்குழு சென்னை திரும்புகிறது. 

சமீபத்தில் பெண் வேடமிட்டு விஜய் சேதுபதியின் சில புகைப்படங்கள் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஜுங்காவின் போஸ்டர் ஒன்றில் விஜய் சேதுபதி கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சுமார் 20 கோடி செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். விஜய் சேதுபதியுடன் சாயிஷா சேஹல், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவடிமேல் உரைத்த தமிழ்

தருமத்தை விதைப்போம்!

இந்தியா ஒரு ஹிந்து நாடு! - ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

SCROLL FOR NEXT