முகப்பு
செய்திகள்

பிரசாந்த் நடிக்கும் புதிய படம் 'ஜானி’ ரீமேக்கா?

நடிகர் பிரசாந்த் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நடிகர் பிரசாந்த் ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். பல வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘ஜீன்ஸ்’ படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த பிரசாந்த்‘சாகசம்’படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தற்போது புதுமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் 'ஜானி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் மலையாளி க்ளப்பில் நடைபெற்றது.

இதுவரை ஏற்றிருக்காத முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளாராம்., சாயாஜி ஷிண்டே, ஆத்மா, அசுதோஷ் ரானா, கலைராணி, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர் ஜீவா ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒரு சில பாடல் காட்சிகளின் படமாக்கம் செய்யப்படவிருக்கிறது. இந்தப் படம் 2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ (JOHNNY GADAAR) படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்ற தகவலை படக்குழுவினர் தெரிவித்தனர். 

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியில் உருவாகவுள்ள 'நான்' ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் பிரசாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →