செய்திகள்

மெர்சல் பட விவகாரம்: திரைத் துறை அமைப்புகள் கருத்து

DIN

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் இடம்பெற்றது குறித்து திரைத் துறையைச் சேர்ந்த அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்: "மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைதளங்களிலும், தேசிய அளவிலும் வெளியாகியுள்ளன. ஒரு திரைப்படம் கற்பனைக் கதையாக வரும் போதே, அந்தக் கதைக்குப் பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெரிவிக்கும் வகையில் திரையில் " டிஸ்கிளைமர்' என்ற சொற்றொடர் திரையிடப்படுகிறது. 
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்தச் சான்றிதழை முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். 
அந்தச் சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பது அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது. 
இவ்வளவு விஷயங்களைத் தாண்டி, பல கோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுகிறோம். படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறானது. இதனைத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு போதும் ஆதரிக்காது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துகள் எழலாம். அந்தக் கருத்துகளைப் பகிர்வதோடு இருக்கலாமே தவிர, படத்தின் தயாரிப்பாளரிடம் அக்காட்சிகளை நீக்கச் சொல்வது தவறு. 
தணிக்கைச் சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். 
தென்னிந்திய நடிகர் சங்கம்: மெர்சல் படத்தில் வரும் கருத்துகள், வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவைதான். 
ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் சினிமா ஊடகத்துக்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தணிக்கைக் குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. 
தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த மெர்சல் படத்தில் உள்ளவற்றை யாருக்காகவும் நீக்கக் கூடாது. இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்னைகள் உருவாகக் காரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT