முகப்பு
செய்திகள்

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!

மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை செய்துவருகிறார்கள். விஷால் பட நிறுவனம் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகிறதா எனச் சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையின்போது நடிகர் விஷால் மற்றும் நிறுவன மேலாளர் ஆகியோர் அலுவலகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. 

மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 3 அதிகாரிகள் விஷால் அலுவலகத்துக்கு வந்துள்ளார்கள். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.