செய்திகள்

வட சென்னை கதாபாத்திரத் தோற்றத்துடன் 2.0 விழாவில் பங்கேற்ற தனுஷ்! (படங்கள்)

வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்துடன் விழாவில்...

எழில்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று நடைபெற்றது. படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் இரு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் தனுஷின் குழந்தைகள் உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். 

வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்துடன் விழாவில் கலந்துகொண்டார். விழாவில் பேசிய தனுஷ், இந்திய சினிமாவின் பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழா இதுதான் என்று கூறினார். விழாவில் பங்கேற்ற தனுஷின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT