முகப்பு
செய்திகள்

ரகசியத் திருமணம் செய்ய முடிவெடுத்தாரா நயன்தாரா?

கோலிவுட் காதல் ஜோடியான நயன்தாரா-விக்னேஷ் சிவன் விரைவில் ரகசிய திருமணம்

Updated On : 29 அக்டோபர், 2017 at 3:45 PM
பகிர்:

கோலிவுட் காதல் ஜோடியான நயன்தாரா-விக்னேஷ் சிவன் விரைவில் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அவர் இவரைப் புகழ்வதும், இவர் நெகிழ்ச்சியடைவதும் ரசிகர்களிடையே இந்த ஜோடியின் காதலை உறுதி செய்தது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடி, அவருக்கு கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்ந்தார் நயன்.

விரைவில் திருமணம் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது. தங்களது திருமணத்தை நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் ரகசியமாக செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் புதிய வீடு ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளார்களாம்.

Advertisement

திருமணத்துக்கு பின் அவர்கள் அவ்வீட்டில் குடியேற திட்டமிட்டுள்ளார்கள் என்கிறது நயன் தரப்பு. இந்த ஜோடி தங்களது திருமணம் குறித்து இதுவரை மனம் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.