செய்திகள்

தள்ளிப் போகிறதா ரஜினியின் '2.0' வெளியீடு? புதிய தகவலால் குழப்பம்!  

அடுத்த வருடம் ஜனவரி  25-ஆம் தேதி ரஜினிகாந்தின் '2.0' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அபபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்று ...

DIN

மும்பை: அடுத்த வருடம் ஜனவரி  25-ஆம் தேதி ரஜினிகாந்தின் '2.0' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அபபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவலால், பட ரிலீஸ் பற்றி குழப்பங்கள் உண்டாகியுள்ளன.

இயக்குனர் ஆர்.பால்கி இயக்கத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்திப் படம் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்ட  'பேடுமேன்'. இதன் போஸ்ட் ப்ரொடொக்ஷன் வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது என படத்தின் போஸ்டர் ஒன்றுடன் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அக்ஷய்குமார் பகிர்ந்திருக்கிறார் .

இதன் காரணமாக ரஜினியின் '2.0' வெளியீடு அறிவித்தபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னதாக தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த படமானது, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

'2.0' படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். அத்துடன் இதனை ஒரு சர்வதேச படமாக உருவாக்கியுள்ளதாக இயக்குனார் ஷங்கர் கூறியுள்ளார். எனவே ஒரே தேதியில் அக்ஷ்ய் குமாரின் இரு படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் '2.0' வெளியீடு தள்ளிவாய்ப்பு தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிபிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

SCROLL FOR NEXT