முகப்பு
செய்திகள்

நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை வழக்கு: தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவு!

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் மரணம் தொடர்பான வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிய...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் மரணம் தொடர்பான வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த கார்த்திகேயன்-சின்னத்திரை நடிகை மைனா நந்தினி ஆகியோர் திருமணம் முடித்து சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரைப் பிரிந்து அவரது தந்தை வீட்டில் நந்தினி வசித்து வந்தார். இதில் மனமுடைந்த கார்த்திகேயன், கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி விருகம்பாக்கம் விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 'தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யாமல், சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி கார்த்திகேயனின் தாய் சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், நடிகை நந்தினியின் கணவர் மரணம் தொடர்பான வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யவேண்டும். சட்டப்பிரிவு 306-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.