செய்திகள்

திரைப்படம் இயக்குவது எப்படி என்பதை ஹாலிவுட்டில் கற்றேன் - தனுஷ் பேட்டி!

IANS

'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’இது தனுஷ் நடித்துவரும் ஹாலிவுட் படம். இதே தலைப்பில் வந்த நாவலின் அடிப்படையில் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள். இந்தப் படத்தில் நடித்தபோது திரைப்பட உருவாக்கத்தை பற்றி நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டதாக தனுஷ் கூறியுள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத் திறமையுடன் திரைத்துறையில் தனுஷ் இயங்கி வருகிறார். இதற்குக் காரணம் அவரின் திறமையும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலுள்ள ஆர்வமும்தான்.

அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது, 'கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு நான் வேலை செய்தாலும், என்னுடன் பணி புரிபவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக் கொள்வது எனக்குப் பிடிக்கும். பாலிவுட்டில் படத் தயாரிப்பு சார்ந்த விஷயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன். ஆனால் ஹாலிவுட்டில் முற்றிலும் வேறொரு புதிய திறப்பு. ஹாலிவுட் திரைப்பட இயக்கம் பற்றிய எனது புரிதலை விரிவாக்கியுள்ளது’ என்றார் தனுஷ்.

மர்ஜானே சத்ரபி இயக்கியிருக்கும் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’படத்தில் தனுஷ் அஜாதசத்ரு எனும் பெயருடைய தெரு வித்தைக்காரனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் தனுஷ்.

'கடவுளின் அருளால் தான் இந்தப் படத்தின் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் இரண்டொரு ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் அஜாதசத்ரு. தெருவில் வித்தைகள் காட்டும் மாயக்காரன் அவன். பாசிட்டிவ் விஷயங்களை பரவச் செய்யும் வித்தியாசமான படமாக இது இருக்கும்’என்றார்.

தனுஷ் தற்போது மாரி 2, எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்த வருடம் ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT