முகப்பு
செய்திகள்

கமல் - எஸ்.வி. சேகர் சந்திப்பு!

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

கமல் ஹாசனை நடிகர் எஸ்.வி. சேகர் இன்று சந்தித்தார். 

கமலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எஸ்.வி. சேகர் கூறியதாவது: முறையாக வருமான வரி கட்டும் கமல் அரசியலுக்கு வரவேண்டும். அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. கமல் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன் என்று தெரிவித்தார். 

கடந்த சில வாரங்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார் கமல். இந்நிலையில் எஸ்.வி. சேகர் கமலைச் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து உரையாடியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →