செய்திகள்

நாளை வெளியாகிறது ரஹ்மானின் ஒன் ஹார்ட் இசைத் திரைப்படம்!

எழில்

ரஹ்மானின் ஒய்எம் மூவிஸ் இயக்கி தயாரித்துள்ள ஒன் ஹார்ட் திரைப்படம், நாளை வெளியாகிறது.

ஒன் ஹார்ட், இந்தியாவின் முதல் கான்சர்ட் படம் என்று குறிப்பிடப்படுகிறது. 2 வருடங்களுக்கு அமெரிக்காவில் 14 நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தினார் ரஹ்மான். அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அதைத் தற்போது ஒரு திரைப்படம் போல தொகுத்துள்ளார்கள். ஒன் ஹார்ட் படத்தில் ரஹ்மானின் பேட்டிகள், மேடையில் பாடப்பட்ட முக்கியமான பாடல்கள், ஓர் இசைப்பயணத்துக்கு அவர் எப்படித் திட்டமிடுகிறார், மேடையில் என்னென்ன நிகழும்,  இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படிப் பணிபுரிகிறார் போன்ற அம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படம் இது.  

இந்தப் படத்தில் இசைதான் மொழி என்கிறார் ரஹ்மான். ஒன் ஹார்ட் - தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளிவருகிறது.

இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இசைக்கலைஞர்களுக்கு உதவி வரும் ஒன்ஹார்ட் அறக்கட்டளைக்கு வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT