சமீபத்தில் வெப் சீரீஸ் எனப்படும் இணையத் திரைப்படங்கள் பிரபலமாகி வருகின்றன. ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் கூட மிகப் பிரபலமாகி வரும் இந்த வெப் தொடர்களை டிஜிட்டல் மீடியாவின் அடுத்தக் கட்ட சாத்தியமாக நெட்டிசன்கள் இந்த வெப் சீரீஸ்களை விரும்பிப் பார்க்கின்றனர். கோலிவுட்டில் இந்த முயற்சிகள் தொடங்கிவிட்டன. பாலாஜி மோகன் As I am Suffering from Kadhal எனும் வெப் சீரீஸை இயக்கி, நடிக்கவும் செய்தார். அது பரவலாக கவனம் பெற்ற நிலையில் சமீபத்தில் கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்ட்யின்மெண்ட் தயாரிப்பில் வீக் எண்ட் மச்சான் எனும் புது வெப் சீரீஸ் உருவாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் கவனமும் இணையதளம் பக்கம் திரும்பியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியது, 'இந்த வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது. அதை செயல்படுத்த ஆப் ஒன்றினையும் உருவாக்க திட்டமிட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் விஐபி-2 பட வேலைகளில் பிஸியாக இருந்துவிட்டால் இதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. அப்படியே இது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. மீண்டும் அதைக் கையில் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். நிச்சயம் அடுத்த வருடம் அது செயல்படுத்தப்படும்’என்றார் தனுஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.