செய்திகள்

ப்ரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘ஹெளரா பிரிஜ்’ திரில்லர் படம், உண்மைச் சம்பவமாம்!

சரோஜினி

கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி ப்ரியங்கா திரிவேதி, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் அவர் நடித்த ‘ராஜா; திரைப்படத்தில் முதல் நாயகியான ஜோதிகாவைக் காட்டிலும், படத்தின் சில காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த இரண்டாம் நாயகியான ப்ரியங்காவுக்கு வரவேற்பு அதிகமிருந்தது. ப்ரியங்கா, விக்ரமுடன் ஜோடியாக நடித்த ’காதல் சடுகுடு; திரைப்படத்தில் கூட ப்ரியங்காவுக்கு ரசிகர்களது ஆதரவு அமோகமாகவே இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, பிற மொழிப்படங்களில் தொடர்ந்து நடிப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. 

இடையில் நடிகர் உபேந்திராவுடன் திருமணம் ஆன பின்னர் கோலிவுட்டை முற்றிலுமாக மறந்து விட்டார் ப்ரியங்கா. அருண் விஜயுடன் நடித்திருந்த ‘ஜனனம்’ திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் காணாமல் போயிருந்த ப்ரியங்கா, குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டிலான பின், சமீபத்தில் ரீஃபைண்டு ஆயில் விளம்பரம் ஒன்றின் மூலம் மீண்டும் கண்களில் தட்டுப்பட்டார். இதோ அடுத்ததாக ‘ஹெளரா ப்ரிஜ்’  எனும் த்ரில்லர் திரைப்படம் மூலம் ப்ரியங்கா மீண்டும் வெள்ளித்திரையில் தரிசனம் தரவிருக்கிறார். தமிழில் அல்ல, கன்னடத்தில். சென்னையிலிருந்து, கொல்கத்தாவுக்கு ஜாகை மாறிச் செல்லும் அம்மா மற்றும் மகளைப் பற்றியதான இந்தக் கதையில் ப்ரியங்கா, சிங்கிள் பேரன்ட்டாக நடித்திருக்கிறார். மகளாக பேபி ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அம்மாவும், மகளும் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்கையில் அங்கே மகளைப் பறிகொடுத்து விட்டு, காணாமல் போன தன் மகளை ஒற்றை ஆளாக ப்ரியங்கா எப்படி மீட்கிறார் என்பது தான் இந்த த்ரில்லர் திரைப்படத்தின் அவுட்லைன். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, படம் பார்க்கும் ரசிகர்களை, சீட் நுனிக்கு வர வைக்கத்தக்க அளவில் இப்படத்தில் த்ரில்லர் காட்சிகள் படு கச்சிதமாகத் திட்டமிட்டு படமாக்கப்பட்டிருப்பதாக உறுதியளித்திருக்கிறார். லோஹித், கதை மற்றும் திரைக்கதை அமைத்துள்ள இப்படம் கொல்கத்தாவில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT