செய்திகள்

8000 திரையரங்குகளில் வெளியாகும் இந்திப் படம்! பாகுபலி சாதனை முறியடிப்பு!

DIN

பாகுபலி தான் இதுவரை அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம் என்ற சாதனையை பெற்றது. 7500 திரையரங்கில் வெளியான பாகுபலியின் சாதனையை முறியடித்துள்ளது ஒரு இந்தித் திரைப்படம்.

பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல பிரம்மாண்ட திரைப்படங்களை எடுத்த சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் 'பத்மாவதி’ படம் தான் அது. இந்தியாவில் மட்டுமே 8000 திரையரங்குகளில் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியாகவுள்ளதாம் இத்திரைப்படம்.

பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் பத்மாவதியாகும். இது ஒரு வரலாற்றுக் கதை. ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ராணி பத்மாவதியின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில், பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனும், அவரைக் கவர்ந்து செல்ல முயலும் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடிக்கின்றனர். இப்படத்துக்காக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்கர் கோட்டையில் அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்த சமயத்தில் பெரும் சர்ச்சையானது. 

பத்மாவதி இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT