செய்திகள்

ரஜினியின் 'காலா' 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்தது!

IANS


காலா திரைப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் திரைப்படங்களில் இதுவே மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மின்னல் வேகத்தில் வேலைகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்னால் ரஜினியின் உடல் நலக் குறைவால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. அதன் பின் ரஜினி உடல் நலம் அடைந்ததும், அதே உற்சாகத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதுடன், இரண்டே வாரத்தில் தன்னுடைய பகுதிகளை நடித்து முடித்துவிட்டார். 

பா.ரஞ்சித் இது வரை தான் இயக்கிய படங்களில் காலாவைப் போல விரைவாக எந்த ஒரு படத்தையும் இயக்கியதில்லையாம். படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிவடைந்துவிட்ட நிலையில், ரஜினி தோன்றும் காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்டதால் அவர் ஏற்கனவே மும்பையிலிருந்து சென்னை திரும்பிவிட்டார். பிற காட்சிகளையும் இதே வேகத்துடன் எடுத்து படப்பிடிப்பை விரைவில் முடிக்கவுள்ளார் ரஞ்சித். மேலும் இப்படம் எதிர்பார்த்ததை விடப் பிரமாதமாக வந்துள்ளது என்றனர் படக்குழுவினர்.

மும்பை குடிசைப்பகுதியில் தலைவராக இருக்கும் ஒருவர் பவர்ஃபுல் தாதாவாக மாறிய கதைதான் 'காலா'. சூப்பர் ஸ்டார் ரஜினி இப்பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். இப்படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருவது உண்மை.

'காலா’வில் ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திர கனி மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

கபாலிக்குப் பிறகு ரஜினி ரஞ்சித் இணையும் இரண்டாவது படம் காலா. தனுஷ் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் 2018 ஜனவரி 25-ம் தேதி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT