செய்திகள்

மகாநதி திரைப்படத்தில் எஸ்.வி.ரங்கா ராவ் வேடத்தில் மோகன்பாபு!

சாவித்ரி நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று ‘மாயாபஜார்’ இந்தத் திரைப்படத்தில் சாவித்ரியுடன் இணைந்து பலே காமெடியாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளி

சரோஜினி

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை ‘மகாநதி’ என்ற பெயரில்  தெலுங்கில் திரைப்படமாகி வருவது எல்லோருக்கும் தெரிந்த செய்தியே! நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்ரி வேடத்தில் நடிப்பதும்,  துல்கர் சல்மான், ஜெமினி கணேசன் வேடத்தில் நடிக்கவிருப்பதும், இவர்களைத் தவிர அத்திரைப்படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதும் கூட நாமறிந்த செய்தியே! இதில் அறியாத செய்தி என்றால் அது; இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் நடிகர் மோகன்பாபு நடிக்கவிருக்கிறார் என்பது தான். 

சாவித்ரி நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படங்களில் ஒன்று ‘மாயாபஜார்’ இந்தத் திரைப்படத்தில் சாவித்ரியுடன் இணைந்து பலே காமெடியாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் கொண்டவர் நடிகர் எஸ்.வி. ரங்கா ராவ். 

‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்

இது கெளரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும்’

- என்றொரு பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். அப்படியிருக்கையில் சாவித்ரியின்  வாழ்க்கை படமாக்கப்படும் போது, அதில் எஸ்,வி.ரங்காராவ் இல்லாமலா?! இதோ எஸ்.வி ரங்காராவ் வேடத்தில், தான் நடிக்கவிருப்பதாக மோகன் பாபுவே ஒரு விழாவில் தெரிவித்திருப்பதாக செய்திகள் உலவுகின்றன. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு மோகன் பாபு தான், கடோத்கஜனாக அறிமுகமாகவிருக்கிறார் போல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT