முகப்பு
செய்திகள்

நயன்தாரா படத்தில் நடிக்கிறார் சின்னத்திரை புகழ் ஜாக்குலின்!

நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர் ஜாக்குலின்

Updated On : 26 செப்டம்பர், 2017 at 5:53 PM
பகிர்:

நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர் ஜாக்குலின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'கோலமாவு கோகிலா' (சுருக்கமாக 'கோ கோ') என்ற படம் தான் அது. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம் முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையாகும். யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் ஜாக்குலின் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இதற்கு முன் சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா ஆனந்த் எனப் பலரைக் கூறலாம். அந்த வெற்றி வரிசையில் சமீபத்தில் அடியெடுத்து வைத்திருப்பவர் ஜாக்குலின்.

Advertisement

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் அழகான சிரிப்பாலும் அதிராத காமெடியாலும் மக்கள் மனதை வென்றவர் ஜாக். அடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்க இருக்கிறார். முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்கிறார். இப்படத்தில் அவர் முழு கதையிலும் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் ஆகியவற்றை இயக்கி, மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.