செய்திகள்

தமிழ்த் திரையில் மீண்டும் ஒரு லிப்-லாக் முத்தக் காட்சி!

DIN

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமியின் இயக்கத்தில் உருவாகி வரும் இரு மொழிப் படம் 'அபியும் அனுவும்'

திரைத்துறையை விட்டு கிட்டத்தட்ட 22 வருடங்கள் விலகியிருந்த விஜயலட்சுமி, 'அபியும் அனுவும்' படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார். இம்முறை மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் இப்படத்தை இயக்குகிறார். 

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தமிழ் திரைக்கு இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பியா பாஜ்பாய் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அழகான காதல் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்துக்காக முத்தக் காட்சியை சமீபத்தில் படமாக்கினார் இயக்குனர் பி.ஆர். விஜயலட்சுமி. அது குறித்து அவர் கூறுகையில், ‘படத்தின் கதைக்காகவே அக்காட்சி எடுக்கப்பட்டது.  கதைப்படி அது முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் 'இந்தக் காட்சி பரபரப்பாகவோ, படத்துக்கான விளம்பரத்துக்காகவோ எடுக்கப்படவில்லை. கதையின் தேவைக்கு ஏற்பத்தான் எடுத்துள்ளோம். ஒரு நல்ல ரொமாண்டிக் படத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. எனவே இளைஞர்களுக்கு ஏற்றவகையில் அழகான ஆழமான ஒரு காதல் கதையை உருவாக்கி வருகிறோம். இதில் டொவினோ தாமஸ் பியா பாஜ்பாய் ஜோடியாக நடிக்கிறார். படத்தின் கதைக்காகவே முத்தக் காட்சியைப் படமாக்கினோம். மேலும் அந்த காட்சியைப் பற்றி நான் எடுத்துச் சொன்னபோது அவர்கள் இருவருமே எவ்வித தயக்கமும் இல்லாமல் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்’ என்றார்.

இந்தப் படத்துக்காக பியா பாஜ்பாய் மொட்டை போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் டீஸரை சமீபத்தில் ஜெயம் ரவி வெளியிட்டார்.

இப்படத்தை யூட்லி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதுடன் நிர்வாகத் தயாரிப்பையும் ஏற்றுள்ளார். அபியும் அனுவும் படத்தில் பிரபு, சுஹாசினி, ரோஹினி, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

அபியும் அனுவும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT