செய்திகள்

ஒரு ‘பிக் பாஸ்’ எபிசோடைத் தொகுத்து வழங்க ரூ. 11 கோடி சம்பளமா? சல்மான் கான் பதில்!

சல்மான் கான் போன்ற ஒரு நடிகர் குறைந்த சம்பளத்துக்குக் கிடைக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்...

எழில்

ஹிந்தி பிக் பாஸ் அக்டோபர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது.

கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் இரவு  9 மணிக்குத் தொடங்கும்.

கடந்த ஏழு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வருகிறார். இந்த வருடமும் இவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். வார இறுதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அரங்கினுள் சென்று போட்டியாளர்களுடன் சில நாள்கள் தங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான், இந்த வருடம் ஒருநாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ரூ. 11 கோடி சம்பளம் பெறுகிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது சல்மான் கானிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த சல்மான் கான், ராஜ் நாயக்கை (நிகழ்ச்சியைத் தயாரிக்கும் எண்டமோல் நிறுவனத் தலைமை நிர்வாகி) இந்தச் சம்பளம் வழங்கச் சொல்லுங்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். 

இதுபற்றி ராஜ் நாயக் கூறும்போது, சல்மான் கான் போன்ற ஒரு நடிகர் குறைந்த சம்பளத்துக்குக் கிடைக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT