செய்திகள்

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நியூட்டன் படத்துக்கு நல்ல வசூல்!

எழில்

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியாவிலிருந்து 'நியூட்டன்' என்ற ஹிந்தி திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. 

உலக அளவில் சிறந்தத் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். அந்தத் திரைப்படங்களை ஆஸ்கர் குழுவினர் ஆராய்ந்து, அவற்றை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுக் குழுவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) அனுப்பி வைத்துள்ளது.

ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்காக இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 26 திரைப்படங்களுள் நியூட்டன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரான் சென் தெரிவித்தார்.

படம் வெளியான தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியானதால், படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதனால் முதல் நாளுக்குப் பிறகு படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 96 லட்சம் வசூலித்த இந்தப் படம் அடுத்த இரு நாள்களில் ரூ. 2.50 கோடி, ரூ. 3.40 கோடி வசூலைப் பெற்று அசத்தியது. திங்கள் முதல் நேற்று வரை தினமும் குறைந்தது ரூ. 1 கோடி வசூலாவது பெற்று விடுகிறது. இதையடுத்து முதல் 6 நாள்களில் ரூ. 10.7 கோடி வசூல் பெற்று ஹிட் ஆகியுள்ளது. சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல விமரிசனங்களாலும் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டதாலும் இந்த நன்மைகளைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT