செய்திகள்

சினிமா கேளிக்கை வரி 20% குறைப்பு!

எழில்

தமிழ்நாட்டில், திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி, 30%-ல் இருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-யுடன், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரிக்குத் திரையுலகினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசின் 30 சதவீதக் கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் சில நாள்கள் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டன. திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்ததாகக் கூறப்பட்டது. 

பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பினர் மற்றும் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலகினருடன், அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கேளிக்கை வரியை மொத்தமாக நீக்க வேண்டும். முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது சினிமா டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று திரைத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் கேளிக்கை வரி தொடர்பான உத்தரவை தமிழக அரசு இன்று வழங்கியுள்ளது. புதிய உத்தரவின்படி, கேளிக்கை வரி 30%-ல் இருந்து 10%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி செப்டம்பர் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு 7% வரியும் மற்ற மொழிப் படங்களுக்கு 14% கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல மற்ற மொழித் திரைப்படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT