முகப்பு
செய்திகள்

ஒரு வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ள மடோனா!

மடோனா கடைசியாக நடித்த தமிழ்ப் படம் - பா. பாண்டி. கடந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டுச் சமயத்தில் வெளியானது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
பகிர்:

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், யோகி பாபு நடிக்கும் படம் - ஜுங்கா. காஷ்மோரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுல் இயக்கும் படம் இது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - கோகுல் இணையும் படம். கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரிக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவு பெறவுள்ளது.

இந்நிலையில் காதலும் கடந்து போகும், கவண் படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் மடோனா செபாஸ்டியன். ஜுங்கா படத்தில் அவர் கெளரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மடோனா கடைசியாக நடித்த தமிழ்ப் படம் - பா. பாண்டி. கடந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டுச் சமயத்தில் வெளியானது. இந்நிலையில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் ஒருவருடம் கழித்து புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார் மடோனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.