முகப்பு
செய்திகள்

காவிரி & ஸ்டெர்லைட் பிரச்னைகள் தொடர்பாக 8-ம் தேதி நடிகர்கள் போராட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்கக் கோரியும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
பகிர்:

சென்னையில் வரும் 8-ம் தேதி, காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகள் தொடர்பாகக் கண்டன அறவழிப் போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுபற்றிய அறிக்கையில் நடிகர் சங்கம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்கக் கோரியும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.