ஆர்யாவுக்கேற்ற ஜோடி யார்?: பதில் அளித்து இறுதிச்சுற்றை நேரில் காண ஒரு வாய்ப்பு!
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நடைபெறவுள்ளது...
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொள்ளும் 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி இயக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இறுதிச்சுற்று நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் நேரில் காண போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யாவுக்கு சிறந்த ஜோடி யார்? அதற்குக் காரணம் என்ன?
இதற்கான பதிலை ஒரு நிமிட செல்ஃபி வீடியோவாகப் பேசி, உங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர், இஸ்டகிராம் எனச் சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்து, அதை கலர்ஸ்தமிழ், EVMmyvote என டேக் செய்யவேண்டும் என்று இதுகுறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வெற்றி பெறுகிற பார்வையாளர்கள், எங்க வீட்டு மாப்பிள்ளை - இறுதிச்சுற்று நிகழ்ச்சியை நேரில் காண விஐபி அழைப்பிதழைப் பரிசாகப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.