'பாகுபலி' நாயகி தமன்னாவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது!
நடிகை தமன்னா பாலிவுட் மட்டும் தென்னிந்திய திரை உலகில் நடித்து வருகிறார். அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை
நடிகை தமன்னா பாலிவுட் மட்டும் தென்னிந்திய திரை உலகில் நடித்து வருகிறார். அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கெளரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஜீ அப்ஸரா வழங்கிய deserving woman achiever என்ற பிரிவில் விருதைப் பெற்றார் தமன்னா.
சினிமாவுக்கு தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வசூல் சாதனை புரிந்த பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படங்களில் தமன்னாவில் சிறப்பான நடிப்புக்காக தாதா சாஹேப் சிறப்பு விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
மும்பையை சேர்ந்த தாதா சாஹேப் பால்கே அறக்கட்டளை சார்பாக இந்த விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருதை பெறுகிறார் தமன்னா.பாலிவுட் தயாரிப்பாளர் என்ற வகையில் அனுஷ்கா ஷர்மாவிற்கும், பத்மாவத்தில் சிறப்பான நடிப்புக்கு ரன்வீர் சிங் ஆகியோரும் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
Advertisement
இது குறித்து தமன்னா கூறுகையில், ‘நான் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நான் பெரிதும் வியந்த விருது இது. தற்போது இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன்’ என்றார் தமன்னா.
தற்போது, நா நுவே, க்வீன் ஒன்ஸ் அகெய்ன் மற்றும் கண்ணே கலைமானே ஆகிய படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.