செய்திகள்

உடனே மரண தண்டனை வழங்குங்கள்! நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு!

சினேகா

அண்மையில் நடந்த சம்பவங்களை பார்த்து மனம் பதறாதவர் என யாரும் இருக்க முடியாது. ரோஜா மலர் போன்ற அழகான பெண் குழந்தைகளுக்கு இத்தகைய கொடூர வன்கொடுமை செய்தவர்களின் புத்தியில் அது குழந்தை என்று கூட தெரியாத கொடூரம் இருக்குமெனில் அந்த மனித மிருகங்களின் மரணமும் அப்படித்தானே இருக்க வேண்டும்? சட்டம் சாட்சியத்தை தேடிக் கொண்டிருக்கட்டும், எத்தனை சாட்சியங்கள் இருந்தாலும் சட்டம் ஒரு ஓட்டை பாத்திரம் என்பது அனைவரும் அறிந்ததுதான். நியாயத்தை கோரும் மக்களின் மனங்கள் சூழலின் கனத்தால் இருண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு?

எல்லாம் விளம்பரமாகிவிட்ட இந்த க்ளோபல் உலகத்தில் நீதி நியாயம் உண்மை மட்டும் ஏன் எட்டாக்கனியாக இருக்கிறது? ஏன் சாமான்னியர்கள் மட்டுமே தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். தட்டிக் கேட்க வேண்டிய மீடியாக்கள் நடிகையின் காலை உணவு கவரேஜ் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும், அல்லது பிரச்னையை முற்றிலும் திசை திருப்பும் விதமாக வினைபுரிவோரின் பக்கம் ஒதுங்கிவிடும். எந்த நிலையிலும் ஒருசிலர் தங்களுடைய தார்மிக கோபத்தை பதிவு செய்தே வருகிறார்கள். நடிகர் விவேக் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது சிந்தக்க தூண்டும் விஷயம். 

பெண்களை, சிறுமிகளை வன்புணர்வு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த நபரின் இன, மத, வயது, பதவி, சமூக அந்தஸ்து என எதையும் பார்க்காமல், தாமதிக்காமல் உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்க, உயிரழப்பது அப்பாவி குழந்தைகள், பெண்கள் எனும் நிலை மாற வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும். அப்போதுதான் தண்டனை குறித்த பயத்திலாவது ஓரளவுக்கு குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த அரசு இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT