முகப்பு
செய்திகள்

திருமணத்துக்குப் பிறகான முதல் பிறந்த நாளை படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடிய சமந்தா! (படங்கள்)

சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளுக்கு திருமணம் நடந்தால், தானாகவே மார்க்கெட் சரிந்து விடும்.

Updated On : 29 ஏப்ரல், 2018 at 2:31 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:23 PM

பொதுவாக நடிகைகள் தங்களது திருமணத்தைத் தள்ளிப் போடுவார்கள். காரணம் அதன்பின் அவர்களது மார்கெட் என்பது சந்தேக்கத்துக்குரியதுதான். ஆனால் திருமணத்துக்கு பின்னரும் தனக்கென தனி ரசிகர்களை தக்க வைத்துள்ளார் நடிகை சமந்தா. டோலிவுட் மற்றும் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் நாயகி இவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் பெரும் வெற்றி பெற்றது. மே 9-ம் தேதி மகாநடி, நடிகையர் திலகம் ஆகிய படங்களும், அதே மாதம் இரும்புத் திரையும் வெளியாக உள்ளது.  சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார். 

தனது வெற்றியின் காரணமாக சமந்தா கூறுவது, 'சொந்த வாழ்வும் சரி சினிமா வாழ்க்கையில் சரி இரண்டிலும் எனக்கு நிறைவான மகிழ்ச்சி. கணவர் மற்றும் குடும்பத்தினர் என் சுதந்திரத்தை மதிக்கின்றனர். அதனால் தான் திருமணத்துக்கு பிறகும் என்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது.

அவர்கள் ஆதரவினால்தான் சினிமாவில் தொடர்ந்து சாதிக்க முடிகிறது. நான் நடித்த படங்களின் வெற்றியை கொண்டாட முடிகிறது. சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது' என்றார்.

Advertisement

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) சமந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, அப்போது யூ டர்ன் படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சமந்தா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.

இந்த வருடப் பிறந்த நாளில் சமந்தாவிற்கு மூன்று கேக்குகள் பரிசாக வந்துள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய பின் தில்லிக்குச் சென்றுள்ளார். அவருக்கு பல தெலுங்கு, தமிழ் நடிகர்கள், நடிகைகள் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தனர். யூ டர்ன் படப்பிடிப்புக் குழுவினர் அவருக்காக கேக் வெட்டச் செய்து பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். யூ டர்ன் படத்தின் இயக்குனர் பவன்குமார் மற்றும் நடிகர் ஆதி ஆகியோர் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.