செய்திகள்

சிவகாமி ராணியான கதை: நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவரவுள்ள ‘பாகுபலி’யின் முந்தைய கதை! முழு விவரங்கள்!

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி. இரு பாகங்களாக வெளிவந்து வசூலில் மகத்தான சாதனை படைத்தது.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்தை மையப்படுத்தி நெட்பிளிக்ஸ் தளத்தில் இணையத் தொடர் ஒன்று உருவாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Baahubali: Before the Beginning என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரை இயக்குநர் எஸ். எஸ். ராஜமெளலி, அர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது நெட்ஃபிளிக்ஸ். தேவ கட்டா, பிரவீன் சத்தரு ஆகிய இருவரும் இணைந்து இந்த இணையத் தொடரை இயக்கவுள்ளார்கள். பிரஸ்தனம் என்கிற தெலுங்குப் படத்தை தேவ கட்டாவும் சந்தமாமா கதலு என்கிற தெலுங்குப் படத்தை பிரவீன் சத்தரும் இயக்கிக் கவனம் பெற்ற நிலையில் இருவருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இருவருமே அமெரிக்க வாழ் இந்தியர்கள். 

ஆனந்த் நீலகண்டன் எழுதிய The Rise of Sivagami என்கிற நூலை அடிப்படையாகக் கொண்டு 9 அத்தியாயங்களாக இந்தத் தொடர் உருவாகவுள்ளது. ராணி சிவகாமியின் வாழ்க்கையும் மகிழ்மதி பேரரசின் வளர்ச்சியும் இந்தக் கதையில் விரிவாகச் சொல்லப்படவுள்ளது. தொடர் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறியப்படுகிறது. 

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது நெட்பிளிக்ஸ் தளம். Baahubali: Before the Beginning தொடரை டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றில் நெட்பிளிக்ஸ் வழியாகப் படம் பார்க்கமுடியும். இதற்கெனத் தனிக்கட்டணங்கள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT