இது மட்டும் சரியாக அமைந்து விட்டால் சினிமாவில் நஷ்டமே ஏற்படாது: அறிமுக இயக்குநர் பேச்சு!
தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன்...
அறிமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் உருவாகி வரும் படம் - நான் செய்த குறும்பு. சந்திரன், அஞ்சு குரியன் போன்றோர் நடிக்கிறார்கள். ஓர் ஆண் பிரசவத்தை எதிர்கொள்வது போன்ற இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளன.
இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் மகா விஷ்ணு பேசியதாவது:
ஸ்டாண்ட் அப் காமடி, அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில், சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில்
900 பேரிடமாவது இப்படத்தின் கதை குறித்துப் பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை . காரணம் தப்பான கதை , தப்பான படக் குழு , தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி அமைந்துள்ளது. 'நான் செய்த குறும்பு ' ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம்! இது பட்ஜெட் படம்தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு பிரமாண்டம் இருக்கும், தரம் இருக்கும் என்று பேசியுள்ளார்.
Advertisement