செய்திகள்

பவன் கல்யாணின் 2016 ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்பட ரீமேக்கில் விஜய்!

சரோஜினி

பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் ‘அந்தரின்டிகி தாரேதி’. இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை சமீபத்தில் லைக்கா புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தார் வாங்கியிருக்கிறார்கள். தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததோடு இந்தியிலும் டப் செய்யப்பட்ட திரைப்படம் இது. இந்தி தவிர கன்னடத்தில் சுதீப் நடிப்பிலும் பெங்காலியில் ‘அபிமான்’ என்ற பெயரிலும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிகளையும் விருதுகளையும் வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் பவன் கல்யாண், சமந்தா, பிரணிதா, நதியா, பொமன் இரானி உள்ளிட்டோர் நடிப்பில் இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. கதை மிக எளிமையானது என்றாலும் அதன் திரைக்கதையாக்கத்தில் பின்பற்றப்பட்ட உத்தி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. கோடீஸ்வர தாத்தா பொமன் இரானிக்கு பக்கவாதம்... அவரது நெஞ்சில் நீங்காத வடுவாக மிஞ்சியிருக்கிறது மகள் நதியா தந்தையுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு சென்ற சோகம். தந்தைக்குப் பிடிக்காத திருமணத்தால் குடும்பத்தை வெறுத்து ஒதுக்கி விட்டுச் சென்ற அத்தை நதியாவை மீண்டும் தாத்தாவுடனும் தனது குடும்பத்தினருடனும் இணைத்து வைப்பதாக சபதம் செய்கிறார் பேரன் பவன் கல்யாண். கோபித்துக் கொண்டு உறவை வெட்டி விட்டுச் சென்ற அத்தையை என்ன சொல்லி மீண்டும் குடும்பத்துடன் இணைத்து வைக்கிறார். தன் தாத்தாவுடன் இணைத்து வைக்கிறார் என்பது தான் அந்தரின்டிகி தாரேதி திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இந்த துக்கடா கதையை வைத்துக் கொண்டு இயக்குனர் திரிவிக்ரம் படத்தில் பஞ்ச் வசனங்களாலும், திரைக்கதையாக்கத்தாலும் சடுகுடு ஆடியிருப்பார்.

இந்தத் திரைப்படம் தெலுங்கு புரியாதவர்கள் கூட படம் பார்த்தால் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்த படம். இதை தமிழில் சரியான வகையில் உள்வாங்கி நடிக்கக் கூடியவர்கள் என்றால் அது விஜய் மட்டும் தான் என்கிறது டோலிவுட் பட்சி. படத்தில் விஜய் நடிப்பது குறித்து அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் லைக்கா தயாரிக்கும் பட்சத்தில் விஜய் தவிர வேறு யாரும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT