முகப்பு
செய்திகள்

பாரதிராஜாவின் ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா தள்ளிவைப்பு!

பாரதிராஜா இயக்கியுள்ள ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

பாரதிராஜா இயக்கியுள்ள ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி கருணாநிதிக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த ஜூலை 28-ஆம் தேதி அதிகாலையில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று (சீரியஸ் செப்ஸிஸ்') கலந்துள்ள போதிலும், ஜூலை 29-இல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நலம் சீரானது. கடந்த ஆக.2-இல் கருணாநிதியின் ரத்த இயக்கங்களைச் சீராக்கும் முயற்சியாக அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவிலிருந்து கருணாநிதியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது, அந்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

கலைஞர் அவர்களின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது என்கிற செய்தி கேட்டு, அதிர்ச்சியும் துயரமும் மிகுந்த வேதனையும் அடைந்துள்ளேன். ஆகையால் ஓம் படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம் படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா, ஜோ மல்லூரி, மெளனிகா போன்றோர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments