கிழக்கு சீமையிலே படத்துக்குப் பிறகு நான் பெருமைகொள்ளும் படைப்பு: இளையராஜா இசையமைத்த படம் குறித்து தயாரிப்பாளர் தாணு!
கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு...
தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்றொரு படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளார்கள். விஜி வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பா. விஜய், பழனி பாரதி, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
Advertisement
இந்த மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு , என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக #60VayadhuMaaniram அமையபெற்றுள்ளது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது என்றார்.