அனிருத் இல்லை, இமானும் இல்லை: முதல்முறையாக சிவகார்த்திகேயனுக்கு மெட்டமைக்கும் இசையமைப்பாளர்!
எதிர்நீச்சல் படம் முதல் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் வரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத்தும் இமானும்தான் இசையமைத்துள்ளார்கள்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா, சதீஷ் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் எம்.ராஜேஷ் சமீபத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை இயக்கியதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை இயக்கவுள்ளார். வேலைக்காரன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. ராஜேஷ் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இதற்கு முன்பு அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் படங்களுக்கு முதல்முறையாக ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார். எதிர்நீச்சல் படம் முதல் கடைசியாக வெளிவந்த வேலைக்காரன் வரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத்தும் இமானும்தான் இசையமைத்துள்ளார்கள். இந்நிலையில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானும் ராஜேஷ் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழாவும் இசையமைக்கவுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் படங்கள் - இசையமைப்பாளர்
மெரினா - கிரிஷ் ஜி
3 - அனிருத்
மனம் கொத்தி பறவை - இமான்
கேடி பில்லா கில்லாடி ரங்கா - யுவன் ஷங்கர் ராஜா
எதிர் நீச்சல் - அனிருத்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - இமான்
மான் கராத்தே - அனிருத்
காக்கி சட்டை - அனிருத்
ரஜினி முருகன் - இமான்
ரெமோ - அனிருத்
வேலைக்காரன் - அனிருத்
சீமராஜா - இமான்
இயக்குநர் ரவிக்குமார் படம் - ஏ.ஆர். ரஹ்மான்
இயக்குநர் ராஜேஷ் படம் - ஹிப் ஹாப் தமிழா