முகப்பு
செய்திகள்

தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு: இயக்குநர் ஷங்கர் வருத்தம்

உக்ரைனில் மாட்டிக்கொண்டு விட்டதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

சிறந்த தலைவர், தமிழ் அறிஞர், எழுத்தாளர் கலைஞரின் மறைவு குறித்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு இது. உக்ரைனில் மாட்டிக்கொண்டு விட்டதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →