இன்று வெளியாகியுள்ள 4 தமிழ்ப்படங்கள்!
இந்த இரு படங்களுடன் அழகுமகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகிய இரு சிறிய படங்களும் வெளியாகியுள்ளன...
இன்று நான்கு தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல். இந்தப் படம் இன்று காலை 8 மணிக்காட்சியுடன் தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல். பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஓய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டு இப்படத்தை இளன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜா இசை. நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கருணாநிதியின் மறைவால் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
இந்த இரு படங்களுடன் அழகுமகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகிய இரு சிறிய படங்களும் வெளியாகியுள்ளன.