செய்திகள்

விஸ்வரூபம் 2 படத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி விளம்பரத்தை நுழைத்தது ஏன்?: கமல் விளக்கம்!

எழில்

விஸ்வரூபம் 2 படத்தின் தொடக்கத்தில் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரம் காண்பிக்கப்படுகிறது. இதற்குக் கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. படம் பார்க்க வந்தவர்களிடம் கமல் தன்னுடைய கட்சியை விளம்பரப்படுத்துகிறார், கமல் இதுபோல செய்திருக்கக் கூடாது என்று பலரும் கருத்துகளைக் கூறியுள்ளார்கள்.

இதற்கு கமல் பதில் அளித்துள்ளதாவது: 

மக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும். அதற்கு முன்னுதாரணமாக விஸ்வரூபம் 2 படத்தில் பிரசாரப் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை படத்தின் திரைக்கதையில் நான் சேர்க்க மாட்டேன். எந்த மேடை கிடைத்தாலும் பிரசாரம் செய்வேன். ஆனால் கதையில் மய்யத்தின் விளம்பரத்தைப் புகுத்தமாட்டேன். விருமாண்டி, ஹேராம் படங்களிலேயே என்னுடைய கொள்கைகள் உள்ளன என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT