செய்திகள்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், அமேஸான் பிரைமில் வெளியானது!

5-வது வாரமாக 153 திரையரங்குகளில் கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த வாரம் விளம்பரம் வெளியிட்டது...

எழில்

5-வது வாரமாக 153 திரையரங்குகளில் கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த வாரம் விளம்பரம் வெளியிட்டது இதன் படத்தயாரிப்பான 2டி நிறுவனம்.

இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்க்க தற்போது திரையரங்குக்குச் செல்ல வேண்டியதுகூட இல்லை, செல்போன் வழியாகவே அதிகாரபூர்வமாகப் பார்க்கலாம். ஆம், இன்று முதல் அமேஸான் பிரைமில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும். படம் வெளியாகி சரியாக ஒரு மாதம் கழித்து அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ளது கடைக்குட்டி சிங்கம். 

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT