முகப்பு
செய்திகள்

அந்த பாப்கார்னை மாத்திடாதீங்க...: உணர்ச்சிவசப்படும் ‘சத்யம்’ ரசிகர்கள்!

சத்யம் திரையரங்கின் தரம் குறித்தும் முக்கியமாக அங்கு விற்கப்படும் பாப்கார்ன் குறித்தும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

பிவிஆர் திரையரங்கம் சென்னை சத்யம் திரையரங்கத்தின் 77.1 சதவிகிதப் பங்குகளை வாங்கவுள்ளது. இதையடுத்து சத்யம் சினிமாஸ் திரையரங்கம் விரைவில் பிவிஆர் நிறுவனத்துடன் இணையவுள்ளது. இதற்காக சத்யம் திரையரங்குக்கு ரூ. 850 கோடி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சத்யம் சினிமாஸ் குறித்த இந்த அறிவிப்பு சென்னைத் திரைப்பட ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட சத்யம் திரையரங்கம், சென்னையின் அடையாளங்களில் ஒன்று. சென்னையிலுள்ள சினிமா ரசிகர்கள் குறைந்தபட்சம் ஒரு படமாவது இங்கு வந்து பார்த்திருப்பார்கள். இத்திரையரங்கை மிகவும் உணர்வுபூர்வமாக எண்ணும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும்விதமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

அடுத்த ஒருவருடத்தில் பி.வி.ஆர். நிறுவனத்துடன் சத்யம் திரையரங்குகள் இணைக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.  எனினும் சத்யம் சினிமாஸைச் சேர்ந்த கிரண் எம் ரெட்டியும் ஸ்வரூப் ரெட்டியும் சத்யம் சினிமாஸுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பி.வி.ஆர். நிறுவனத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் கூடுதல் அறிவிப்பாக வெளியாகியுள்ளது. 

நேற்று வெளியான இந்தச் செய்தி சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துகளை வெளிகொணர்ந்தது.  பலரும் சத்யம் திரையரங்கின் தரம் குறித்தும் முக்கியமாக அங்கு விற்கப்படும் பாப்கார்ன் குறித்தும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அதன் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments