முகப்பு
செய்திகள்

கஜா புயல் நிவாரணத்துக்கு உதவுங்கள்: அமீர் கான் வேண்டுகோள்!

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு அனைவரும் நிதியுதவி செய்யவேண்டும் என்று பிரபல நடிகர் அமீர் கான் வேண்டுகோள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்நிலையில் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு அனைவரும் நிதியுதவி செய்யவேண்டும் என்று பிரபல நடிகர் அமீர் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கஜா புயலா ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அங்குத் துன்பப்படும் நம்முடைய சகோதரர், சகோதரிகளுக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவுவோம். எந்தவிதத்திலாவது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் உதவவேண்டும் என்று கூறியுள்ளார். அமீர் கானின் இந்தக் கோரிக்கைக்கு கமல் நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments