முகப்பு
செய்திகள்

சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதைப் பெற்றுக் கொண்டார் விஜய்!

சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்தார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 100-வது படம் இது.  மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2014 முதல் வழங்கப்பட்டு வரும் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், இரு பிரிவுகளில் விஜய் இடம்பெற்றார். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றார். இதில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கான IARA விருதை லண்டனில் விஜய் பெற்றுக்கொண்டுள்ளார். இதை IARA அமைப்பு அறிவித்து அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.