முகப்பு
செய்திகள்

பாகுபலி 2-க்குப் பிறகு வெளிவரும் பிரபாஸ் படம்: வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகி வரும் சாஹூ...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம், ரூ. 150 கோடியில் உருவாகி வரும் சாஹூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி போன்றோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 15 அன்று சாஹூ படம் வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →