ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் பட வெளியீடு தள்ளிப் போனது!
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம்...
இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில் வரும் 28 அன்று சர்வம் தாளமயம் படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2.0 படம் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் 5 படங்கள் வெளியாயின. இதனால் சர்வம் தாளம் மயம் படத்துக்கு உரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் இதன் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.