செய்திகள்

ஊடகத் துறையில் பெண்கள் சாதிக்கலாம்! செய்தி வாசிப்பாளர் கீர்த்தனா புகழேந்தி பேட்டி

மீடியா துறைக்குள் நுழைந்தவுடன் பெரும் சவாலாக இருந்தது. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்று முடிவு செய்து தொடர்ந்து கற்றுக் கொண்டேன். 

மணிகண்டன் தியாகராஜன்

நியூஸ் 7 செய்தித் தொலைக்காட்சியில் இவரை செய்தி வாசிப்பாளராக நாம் கண்டிருப்போம். செய்தி வாசிப்பாளர் பணி மட்டுமல்லாமல், indiaglitz சினிமா யூ-டியூப் சேனலில் பல்வேறு திரைப் பிரபலங்களை பேட்டி காண்பவர் ஊடகத் துறையில் சிறப்பான பங்காற்றி வருபவர் இளம் பெண் கீர்த்தனா புகழேந்தி.

இவருக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இவரை தொடர்பு கொண்டு பேசியதிலிருந்து...

அருப்புக்கோட்டையில் பிறந்து வளர்ந்தேன். பொறியியல் படித்தேன். 2010-ஆம் ஆண்டில் சென்னை வந்தேன். இலக்கியம் மீது அதீத காதல் கொண்டிருந்த எனக்கு அதுசார்ந்த படிப்பை தேர்வு செய்ய முடியாமல் போனது வருத்தம். பொறியியல் படிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். மென்பொறியாளராக சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். கிரியேட்டிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்ததால், அந்தப் பணியை விட்டுவிட்டு, ஊடகத் துறைக்குள் நுழைய முயற்சி செய்தேன். மாலை முரசு சேனலில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தேன். பின்னர், பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனேன். செய்தி வாசிப்பைத் தாண்டி வேறு ஏதாவது கிரியேட்டிவாக செய்ய வேண்டும் என்று விரும்பினேன். பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, நியூஸ் 7 சேனலில் வாய்ப்பு கிடைத்தது. செய்தி வாசிப்பு பணி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம், யூ-டியூப் சேனல் நடத்திவரும் indiaglitz நிறுவனத்திலும் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறேன். அங்கு, திரையுலக பிரபலங்களை பேட்டி காண்பதே எனது பணி. இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதால் கவிதைகள் எழுதுவேன். பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது விருப்பம் என்று கூறிய கீர்த்தனா பிரபலங்களிடம் பேட்டி கண்டது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..

சில பிரபலங்களை பேட்டி காண்பதற்கு முன்பு, அவர்கள் ஏற்கெனவே கொடுத்த பேட்டிங்களை பார்த்தும், அவர்கள் பற்றி அதிகம் அறிந்துகொண்டும் பேட்டி காண்பதற்குத் தயாராவேன். ரிசர்ச் டீமும் எனக்கு சில கேள்விகளைத் தயாரித்து கொடுக்கும். அதையும் பயன்படுத்திக் கொள்வேன். இயக்குநர் ராஜீவ் மேனன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரை பேட்டி கண்டதை மறக்கவே முடியாது. தனிப்பட்ட முறையில் இவர்களின் மிகப் பெரிய ரசிகை நான் என்ற அவரிடம், 

என்ஜீனியரிங் படிப்பிலிருந்து மீடியா துறை சவாலாக இல்லையா? என்ற கேள்வியை முன்வைத்தேன்.

மீடியா துறைக்குள் நுழைந்தவுடன் பெரும் சவாலாக இருந்தது. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்று முடிவு செய்து தொடர்ந்து கற்றுக் கொண்டேன். ஆர்வத்துடன் உழைத்தேன். செய்தி வாசிப்பாளராக சேர்ந்த புதிதில் கேமரா முன் அமரும்போதெல்லாம் ஒருவித அச்சம் மனதில் எழும். சீனியர்களை பார்த்து எப்படி அச்சப்படாமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வீட்டில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்து பழகினேன். கேமராவில் நாம் எப்படி பதிவாவோம் என்பதை யோசித்து பார்ப்பேன். இப்படிதான் என்னை தயார் படுத்திக்கொண்டேன். இந்தத் துறைக்கு வர பெற்றோர் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனாலும் எனது கனவை நிறைவேற்றிவிட்டேன்.

செய்தி வாசிப்பாளர் ஆக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனை…

அழகு, நல்ல நிறத்துடன் இருந்தால் தான் செய்தி வாசிப்பாளர் ஆக முடியும் என்றெல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டாம். தமிழ் உச்சரிப்பு திறமையும், தினசரி நாட்டு நடப்பை தெரிந்துவைத்திருந்தாலுமே போதும். இந்தத் துறையில் ஜொலிக்கலாம். சில இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும், போராடும் குணமும், உங்கள் திறமை மேல் உங்களுக்கு நம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக இந்த துறையில் பெண்கள் சாதிக்கலாம். ஊடகத் துறை என்றால் பாலியல் தொல்லை இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் நான், மிகவும் பாதுகாப்பாகவே உணர்கிறேன். உங்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் இந்தத் துறையில் நிச்சயம் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT