செய்திகள்

நடிகை அமலா பாலிற்கு பாலியல் தொல்லை! புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ்!!

DIN

நடிகை அமலா பாலிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று மாலை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில் அந்த நபரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது காவல் துறை.

தமிழ் உட்படப் பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அமலா பால் தனது காதல் கணவனைப் பிரிந்து இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் நடக்கவிருக்கும் ‘டேன்ஸ் தமிழச்சி’ கலை நிகழ்ச்சிக்காக தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நடன இயக்குநர் ஸ்ரீதரின் நடனப் பள்ளியில் நேற்று மாலை நடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேஸ்வரன் என்பவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா செல்லும் போது மற்றுமொரு பார்ட்யிலும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அங்குள்ள தனது நண்பருடன் இணைந்து டின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறியதோடு ‘செக்ஸ் டிரேட்’ செய்வதைப் போல பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது, உடனே அங்கு ஓடி வந்த அமலா பாலின் உதவியாளர் அழகேஸ்வரனை அந்த இடத்தில் இருந்து அகற்ற முயன்றபோது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன? அதனால் தான் இந்த பிரச்னை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரிய தவறு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அமலா பால் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திலேயே மாம்பலம் காவல் துறையினர் அழகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வரும் அழகேஸ்வரன் மலேசியாவில் இருக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவருக்காகத் தான் அமலா பாலிடம் இப்படிப் பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஆழகேஸ்வரன் இந்தக் குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார், அமலா பாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

இவர் மீது பெண்ணின் மாணத்திற்குக் களங்கம் விளைவித்தல் (354A), பாலியல் தொல்லை அளித்தல் (509) எனப் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT